1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances for two days

தமிழகத்திற்கு 2 நாட்கள் வறண்ட வானிலைதான்! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சியால் பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் முன்னறிவிப்பின்றி கடும் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று தமிழகத்தின் தென் கடற்கரையோர பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கோவாக்சின் மட்டுமே... 15-18 வயதுக்குட்பட்டோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!