வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 ஜனவரி 2022 (10:07 IST)

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ஆகிறாரா உதயநிதி?

உதயநிதி தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் பதவி வகித்து வந்தார். அவர் கடந்த வாரம் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து இப்போது அந்த தலைவர் பதவியில் உதயநிதி நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளில் உதயநிதி இறங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.