1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu may have rainfall in 16 districts

16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் கனமழை காரணமாக பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக கன்னியாக்குமரி, மணல்மேல்குடி, கலசபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதி கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
விவசாயிகளை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி கைது