தொடர்புடைய செய்திகள்
- டி-23 புலியை கொல்ல மாட்டோம், உயிருடன் பிடிக்கத்தான் முயற்சி: வன அதிகாரி பேட்டி!
- வனத்துறையினருக்கு போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி! – மசினக்குடி நோக்கி நகர்ந்தது!
- வங்க கடலில் உருவாகிறது புயல்? – எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
- கொடைக்கானலில் நாளை முதல் திறப்பு சுற்றுலாத் தலங்கள் திறப்பு!
- காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானை - பிடிக்க போராட்டம்!
10வது நாளாக தொடரும் டி-23 புலிவேட்டை!
கூடலூர் அருகே மசினகுடி என்ற பகுதியில் நான்கு மனிதர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை கொன்ற ஆட்கொல்லி புலி யானை டி-23 என்ற புலியை பிடிப்பதற்காக தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 100 பேர் வரை இந்த புலியை பிடிப்பதற்காக தீவிர முயற்சி செய்து வருவதாகவும் இதற்காக கூண்டுகள் மயக்க ஊசி ஆகியவை தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது
10-வது நாளாக இன்றும் துப்பாக்கிகளுடன் தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் உயிருடன் பிடிக்க முடியாத நிலையில் அந்த புலியை சுட்டுக் கொல்லவும் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் நேற்று புலியின் உறுமல் சத்தம் கேட்டதாகவும் இருப்பினும் புலியைக் கண்டு பிடிக்க முடியாமல் வனத்துறை திணறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது எப்படியும் இன்னும் ஓரிரு நாட்களில் அந்த புலியை வனத்துறையினர் பிடித்து விடுவார்கள் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
அடுத்த கட்டுரையில்
