1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (16:53 IST)

ஜப்பானை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி! – உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி!

Hockey
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியர்களிடையே மிகவும் விருப்பமான விளையாட்டுகளில் கிரிக்கெட், கால்பந்திற்கு பிறகு ஹாக்கி முக்கியமான இடத்தில் உள்ளது. இந்திய ஹாக்கி அணி இதுவரை பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தோனேஷியாவில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த போட்டிகளில் இந்திய அணியும் கலந்து கொண்டது. இதில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. உலகக்கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.