திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (11:49 IST)

அரசு நீட் பயிற்சி மையங்களில் படித்தவர்களுக்கு வாய்ப்பு! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வி துறை புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் ஆளுனரின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிலேயே இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2017ம் ஆண்டு முதல் அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவரும் நடப்பு கல்வியாண்டில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு பயிற்சி மையங்களில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களை தொடர்பு கொண்டு கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.