நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?
சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு திறக்கப்படுகிறது. இவ்விழாவுடன் இணைந்து, பங்குனி உத்திர திருநாள், சித்திரை விஷு உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதற்காக கோயில் நடை தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடை திறக்கப்பட்டவுடன், ஏப்ரல் 14 அன்று விஷு கனி தரிசனம் மற்றும் படி பூஜைகள் நடைபெறும். பின்னர், ஏப்ரல் 18 இரவு ஹரிவராசனம் முழங்கியதும் நடை மூடப்படும். அதன் பின்னர், வைகாசி மாத பூஜைக்காக மே 14 அன்று மீண்டும் நடை திறக்கப்பட்டு, மே 19 அன்று மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு தரிசனத்திற்காக வருவோர், கட்டாயமாக இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு முன்பு, மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12 அன்று நடை திறக்கப்பட்டு, பிப்ரவரி 17 அன்று மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva