1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 மே 2021 (08:49 IST)

கொரோனா வார்டில் தீ விபத்து; 12 பேர் பலி?! – குஜராத்தில் சோகம்!

குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த மையத்தில் ஏற்பட்ட தீயால் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக வட மாநிலங்களில் அடிக்கடி கொரோனா வார்டுகளில் தீ விபத்து ஏற்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் பரூச் நகரில் உள்ள பட்டேல் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த சிகிச்சை பிரிவில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்துள்ளனர். விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் 12 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.