1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu 6 districts have rain chances today

காத்திருக்குது கனமழை..! 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! – சென்னை வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை மேகமூட்டமாக காணப்படும் என்றும், சில பகுதிகளில் தூறல் அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
சுடுகாட்ட காணும்… அங்க போக வழியையும் காணும்!