வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (12:37 IST)

10-ல் 7 இந்தியர்கள் சீட் பெல்ட் அணிவதில்லை – பகீர் தகவல்!

10-ல் 7 இந்தியர்கள் காரில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதில்லை என்று தகவல்.


டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை என்றும் முன் இருக்கையில் இருந்த இருவர் மட்டும்தான் சீட் பெல்ட் அணிந்திருந்தால் காயங்களுக்கும் உயிர் பிழைத்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 10-ல் 7 இந்தியர்கள் காரில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு இந்தியாவின் 274 மாவட்டங்களில் நடத்தப்பட்டது.

அதன்படி, 26 % பேர் மட்டுமே பின்பக்க இருக்கையில் அமரும் போது சீட் பெல்ட் அணிவது வழக்கம். 10,000 பேரில் 70 சதவீதம் பேர் பின்பக்க இருக்கையில் அமரும்போது சீட் பெல்ட் அணிவதில்லை. 4 சதவீதம் பேர் பின்பக்க இருக்கையில் அமர்ந்து பயணிப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர்.