வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (21:40 IST)

இந்தியா முழுவதிலும் உள்ள 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - பிரதமர் மோடி

BJP Modi
பிரதம மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பு ஏற்றது. இந்த அரசின் திட்டங்கள், அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிரது.

இந்த நிலையில், பாஜக அரசால் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்டது.  இந்த நிலையில், இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள 14,5000 பள்ளிகள் தரமுயர்த்தி மேம்படுத்தப்படும் என்று தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும்,   கற்பித்தல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், தேசியக் கல்வித்திட்டம்  இந்தியாவிலுள்ள மாணவர்களுக்கு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.