1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu 5th mega vaccine camp starts

ஊசி இருக்கு.. போட்டுகிட்டா பரிசும் இருக்கு! – தொடங்கியது 5வது மெகா தடுப்பூசி முகாம்!

Tamilnadu
தமிழகத்தில் 5வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியுள்ள நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலமாக ஏராளமான மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரங்களை போலவே இந்த வாரமும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் பரிசுகளை மாவட்ட, கிராம நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் இன்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல் 26 காசுகள், டீசல் 33 காசுகள் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!