வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (08:42 IST)

பெட்ரோல் 26 காசுகள், டீசல் 33 காசுகள் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் விலையால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன. இதன்படி இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளது. எனவே சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 101.53 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது
 
அதேபோல் டீசல் விலை இன்று 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.97.26 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.