செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (09:05 IST)

”ஆவின் பால் விலையை ஏத்துனா மட்டும் கேள்வி கேக்குறாங்க..” தமிழிசை பாய்ச்சல்

தனியார் பால் நிறுவனங்களை கேள்வி கேட்காமல், ஆவின் பால் விலை ஏறினால் மட்டும் கேள்வி கேட்கிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இதனை கண்டித்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,
தமிழகத்தை பொறுத்தவரை எல்லாமே அரசியல் ஆக்கப்படுவது போல் தான் இந்த பால் விலையும் அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் கொள்முதல் விலை உயர்த்த வேண்டும் என்று கூறுகிற மு.க.ஸ்டாலினுக்கு, கொள்முதல் விலையை உயர்த்தும்போது பால் விலையும் உயரும் என தெரியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் 4 ½ லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு பலன் தருவதற்கான அறிவிப்பை தான் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். தனியார் பால் விலை அதிகமாக இருப்பதை கேட்காமல், உற்பத்தியாளர்களுக்கு பயன் தரும் ஒரு நல்ல நோக்கத்துக்காக ஆவின் விலை ஏற்றினால் மட்டும் கேள்வி கேட்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.