வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (18:18 IST)

பால் விலை உயர்வை அடுத்து பேருந்து கட்டணம் உயருமா ? அமைச்சர் முக்கிய தகவல்

தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு பால் விற்பனையாளர்கள், பால் கொள்முதல் செய்பவர்கள் மற்றும் ஆளுங்கட்சியாளர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மக்களும் எதிர்கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்  ஆவின் பால் விலை ரூ. 6 விலை உயர்த்தப்பட்ட போதிலும் கூட டீ. காபி விலை உயர்த்தப்போவதில்லை என சென்னை பெருநகர கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில்  திருச்சியில் நடைபெற்ற மோட்டார் ஆய்வாளர்களுக்கு வாகன தணிக்கை பணிக்காக தமிழக போக்குவரத்துறை சார்பில் இ சலான் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். சலான் கருவிகளை வழங்கினார்.அப்பொது பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர்  தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.