செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (09:23 IST)

ஆவின் பால் விலைப்பட்டியல் வெளியீடு – இன்று முதல் அமல் !

தமிழக அரசு அறிவித்துள்ள் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வை அடுத்து மாற்றப்பட்ட ஆவின் பால் விலை அதிகமாகியுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பால் உற்பத்தி விலையை உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதேசமயம் பால் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் விலையை 4 ரூபாய் உயர்த்தியும், எருமை பால் விலையை 6 ரூபாய் உயர்த்தியும் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. விற்பனை விலையை 6 ரூபாய் அதிகப்படுத்தி இருந்தது.

அதன் படி ஆவின் பாக்கெட் பால்களின் மாற்றப்பட்ட விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆவினில் கொடுக்கப்படும் நீலம், ஆரஞ்சு, பச்சை என ஒவ்வொரு நிற பாக்கெட் பாலுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆவின் நீல நிற பால் பாக்கெட்
  • அரை லிட்டர் – 20 ரூபாய் (அதிகபட்சம் 21.50 ரூ)
  • ஒரு லிட்டர் – 40 ரூபாய்(அதிகபட்சம்  43 ரூ)
ஆவின் பச்சை நிற பாக்கெட்
  • அரை லிட்டர் – 22.50 ரூ (அதிகபட்சம் 23.50 ரூ)
  • கால் லிட்டர் – 11 ரூபாய் (அதிகபட்சம் 11.40 ரூ)
  • ஒரு லிட்டர் – 45 ரூபாய்
ஆரஞ்ச் பாக்கெட்
  • அரை லிட்டர் – 24.40 ரூ (அதிகபட்சம் 25.50 ரூ)
  • ஒரு லிட்டர் – 49 ரூபாய்