திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (21:15 IST)

பாகிஸ்தானை ஆதரிக்கின்றதா திமுக? தமிழிசையின் திடுக்கிடும் குற்றச்சாட்டு!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. அதுமட்டுமின்றி அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து இது குறித்த மசோதா ஒன்றை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றிய மத்திய அரசு, வரும் அக்டோபர் மாதம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் திட்டமிட்டுள்ளது 
 
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை இந்தியாவில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் மட்டுமே எதிர்த்து வந்த நிலையில் திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அதே போல் உலகின் பல நாடுகள் இந்திய அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்த நிலையில் பாகிஸ்தான் மட்டுமே இந்த நடவடிக்கையை எதிர்த்து வருகிறது
 
மொத்தத்தில் பாகிஸ்தான் மற்றும் திமுக மட்டுமே காஷ்மீர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கோருவதை திமுக ஆதரிக்கின்றதா? என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்த படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார் 
 
ஏற்கனவே தேசிய தொலைக்காட்சி ஒன்றில் பேசிய திமுக பிரமுகர் ஒருவர் 'காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று கூறிவிட்டு பின்னர் அவ்வாறு தான் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது