செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (08:31 IST)

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையில் பாலமாக செயல்படுவேன் – தமிழிசை உறுதி !

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன் என முன்னாள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜகவின் முகமாக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் பாஜக தமிழக தலைவர் பதவியையும் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அவர் தெலங்கானா ஆளுநராக வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி பதவியேற்பார் எனத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை ’ தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் பாலமாகச் செயல்படுவேன். தமிழ் மகளாகவும் தெலுங்கிசையாகவும் தேசியத்தின் குரலாக ஒலிப்பேன். தெலங்கானா அதிகாரிகளை சந்தித்த பின் பதவியேற்பு விழாப் பற்றித் தெரியும். அரசியல் களத்திலிருந்து வெளியேறவில்லை. அரசியலமைப்பு சட்டத்துக்குட்பட்டுச் செயல்படவுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழிசைக்கு அடுத்து தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவார் என்ற கேள்வி தமிழக அரசியல் சூழலில் எழுந்துள்ளது.