வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2019 (19:48 IST)

நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது ! பொருளாதார மந்த நிலைக்கு காரணம் யார் - சுப்பிரமணிய சுவாமி அதிரடி

நம் இந்தியபொருளாதாரம் என்றுமில்லாதா வகையில் கடுமையாக வீழ்ச்சி அடைந்துவருகிறது. அதனால் பல்வேறு துறைகளில் பணியாளர்களை நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்துவருகின்றன. இந்நிலையில் அருண்ஜேட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களுக்கு பொருளாதரம் தெரியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சப்பிரமணிய சுவாமி கூறியதாவது :
 
ஜிஎஸ்டி என்ற புரியாத வரி கொண்டுவரப்பட்டுள்ளது. நரசிம்மராவ், சந்திரசேகர் ஆகியோரின் காலத்தில் பொருளாதார முன்னேற்றம் இருந்தது. பிரதமர் மோடி அரசில் ஏழைகளுக்கு சமையல் எரிவாயு, கழிவறைத்திட்டம் போன்ற திட்டங்களை மக்களுக்குச் செயல்படுத்தினாலும் கூட அவர் பொருளாதார மேதைகளை பயன்படுத்தத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் அருண்ஜேட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களுக்கு பொருளாதரம் தெரியாது எனவும் தற்போது நிலவும் பொருளாதா மந்த நிலைக்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் காரணம் எனவும் கூறினார். 
 
பாஜக மூத்த தலைவர்  சுப்பிரமணிய சுவாமியின் கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.