1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (15:37 IST)

தமிழக பாஜக தலைவராகிறார் கேடி ராகவன்

தமிழக பாஜக தலைவராக கேடி ராகவன் தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்பு அதிகம் என பாஜக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. தெலுங்கானா மாநில ஆளுநராக பாஜக தமிழகத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதை அடுத்து புதிய பாஜக தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது 
 
 
பாஜகவின் புதிய தலைவர் பதவிக்கு எச் ராஜா, கேடி ராகவன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பெயர்கள் கடைசிகட்ட பரிசீலனையில் இருந்து வருகிறது. இதில் கேடி ராகவனுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழக பாஜகவின் செயலாளர் பொறுப்பில் இருந்து வரும் ராகவன் தமிழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சியை தமிழகத்தில் வளர்க்க அவர் தீவிர முயற்சி செய்வார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
 
இருப்பினும் எச். ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் ஆகியோர் பாஜக தமிழக தலைவர் பதவிக்கு கடைசி வரை தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் தங்களுக்கு நெருக்கமான டெல்லி பாஜக தலைவர்கள் மூன் அவர்கள் காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் பாஜகவின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படவிருப்பதால் பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.