வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (08:13 IST)

நாடும் நமதே.. நாற்பதும் நமதே.. திகாரும்...நமதே: தளபதியை வம்பிழுத்த தமிழிசை!!!

நாடும் நமதே.. நாற்பதும் நமதே.. திகாரும்...நமதே: தளபதியை வம்பிழுத்த தமிழிசை!!!
கரூரில் நடைபெற்ற மாநாட்டில் திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் பாஜகவை விமர்சித்து பேசியதற்கு தமிழிசை தனது டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இது பாஜகவினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. ஆனாலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தமிழகத்தில் தாமரையை மலர வைத்தே தீருவோம் என கூறி வருகிறார்.
 
தண்ணீர் இல்லாத தமிழகத்தில் புல்லே முளைக்காது இதில் தாமரை எங்கே மலரும் என தமிழிசையையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பேசினார் ஸ்டாலின். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழிசை இனி மழைக்காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும் என கூறினார்.
நாடும் நமதே.. நாற்பதும் நமதே.. திகாரும்...நமதே: தளபதியை வம்பிழுத்த தமிழிசை!!!
இவ்வாறு ஸ்டாலினுக்கும் தமிழிசைக்கும் வார்த்தைப் போர் அன்றாடம் முற்றிக்கொண்டே போகிறது. சமீபத்தில் கரூரில் நடந்த மாநாட்டில் தளபதியார் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
 
இந்நிலையில் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் நாடும் நமதே நாற்பதும் நமதே. என்று கனவுகாணும் ஸ்டாலின்அவர்களே,!ஊழல் சர்க்கார் நமதே!ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த தி மு க ஊழல்ஆட்சியை மக்கள் மறக்கவில்லை! தி மு க வும்...நமதே!திகாரும்...நமதே! என்று கடந்த காங்கிரஸ் கூட்டணியில் உங்கள்சாதனையையும் மக்கள்மறக்கவில்லை என பதிவிட்டிருக்கிறார்.
 
இதற்கு தளபதியார் என்ன பதிலடி தரப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.