வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (08:14 IST)

கஜாப் புயலின் போது சாமி எங்கேப் போனது ? – ஈபிஎஸ் –ஐ கிழித்த ஸ்டாலின்

செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுக வில் இணையும் விழா நேற்றுக் கோலாகலமாக நடைபெற்றது.

அமமுக வில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திமுக வில் இணைந்தார். அவர் திமுக வில் இணையும் விழா சென்னையில் அறிவாலயத்தில் எளிமையாக நடந்து முடிந்தது. ஆனால் அவரின் செல்வாக்கை காட்டவும் திமுகவும் கரூரில் தனது பலத்தை நிரூபிக்கவும் ஒரு பிரம்மாண்டமான மாநாட்டைக் கரூரில் நடத்த திட்டமிட்டனர்.திட்டமிட்டப்படி நேற்று நடைபெற்ற அந்த மாநாட்டில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள்  ஆயிரம் பேர் திமுக வில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

விழாவுக்குத் தலைமை தாங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசையும் மாநில அரசையும் கடுமையாக விமர்சித்தார். அதிலும் குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமியைக் கடுமையாக விமர்சித்தார்.  அதில் ‘ மக்களின் வரிப்பணத்தில் தயாரான விளம்பரப்படம் ஒன்றில் அர்ச்சகர் யார் பேருக்கு அர்ச்சனை என்று கேட்கிறார்…பக்தர்களோ நம்ம எடப்பாடிப் பழனிச்சாமிக்குதான் எனக் கூறுகிறார். அப்படியானால் எடப்பாடி தனது மனதுக்குள் தனனை சாமியாகவேக் கருதிக் கொண்டிருக்கார் போலும். கஜா புயலால் மக்கள் பாதித்த போது எங்கே போனார் இவர். இவர் மக்களைக் காப்பாற்றுகிற சாமி இல்லை… ஏமாற்றும் ஆசாமி. இவர்களால் தமிழ்நாட்டில் எந்த வொரு தொகுதிக்கும் சென்று ஓட்டுக் கேட்க முடியாது. மக்கள் ஓடஓட விரட்டுவார்கள்’ எனக் காட்டமாக பேசினார்.

ஸ்டாலினின் ஒவ்வொரு பேச்சுக்கும், அதிமுக வினர் மீது அவர் வைத்த குற்றச்சாட்டுக்கும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர் திமுக வினர்.