திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (18:33 IST)

திமுகவில் அழகிரி? கனிமொழி ஷாக்கிங் ரிப்ளை

கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவுக்கு கட்சி மாறிய செந்தில் பாலாஜி இந்த விழாவை ஒருங்கிணைத்திருந்தார்.  
 
இதில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 30,425 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு இவர்கள் வலு சேர்ப்பார்கள். செந்தில் பாலாஜிக்கு மட்டுமில்லாமல் இவர்கள் திமுகவிற்கு பெரிய பலமாக இருப்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார். 
 
இந்நிலையில், வேறு கட்சியிலிருந்து வருபவர்களை திமுக ஏற்றுக்கொள்கிறது. ஆனால், திமுகவில் இணைய வேண்டும் என்று நீண்ட காலமாக முயற்சி செய்து வரும் அழகிரி இன்னும் சேர்த்துக்கொள்ளப்படாமலேயே இருக்கிறாரே என கனிமொழியிடம் கேட்ப்பட்டது. 
 
இதற்கு அவர் சற்றும் யோசிக்காமல், யார் கட்சியில் சேர வேண்டும், யார் கட்சியில் சேரக் கூடாது என்ற முடிவை கட்சியின் மூத்த தலைவர்கள்தான் எடுக்க வேண்டும் என்று பதிலளித்தார்.
 
கலைஞர் மரணத்திற்கு பிறகு திமுகவில் இணைவதற்காக கடும் முயற்சி எடுத்தார் அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.