1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu weatherman post about election

தேர்தலில் வெற்றி பெற இதைமட்டும் செய்தால் போதும்: தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன்
தேர்தலில் வெற்றி பெற ஜாதி கட்சிகளுடன் கூட்டணி தேவை இல்லை என்றும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை இதை மட்டும் செய்தால் போதும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
தேர்தல் வந்தால் கூட்டணி மற்றும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பது தெரிந்ததே ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் எளிது என்றும் ஏரிகள் ஆறுகள் ஆகியவற்றை பாதுகாத்து இயற்கை விவசாயத்தை பாதுகாக்க ஒரு அரசியல் கட்சி முடிவு செய்தாலே அந்த கட்சி எளிதில் வெற்றி பெறும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டரில் கொடுத்துள்ளார் 
 
ஆனால் இவற்றை எந்த அரசியல் கட்சியிலும் புரிந்து கொள்ளாமல் ஜாதி கட்சியுடன் கூட்டணி மற்றும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை விரும்பி வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்
 
தமிழ்நாடு வெதர்மேனின் இந்த கருத்தை பெரும்பாலானோர் வரவேற்றாலும் நம்முடைய அரசியல்வாதிகள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் வாக்களிக்கும் மக்கள் மீதும் தவறு இருக்கிறது என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றன
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ராமர் கோவிலை மிஞ்சும் வகையில் சீதா கோவில்: பீகார் முதல்வர் வேட்பாளர் பேட்டி