திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (15:02 IST)

பாஜகவில் இணைவது குறித்து விரைவில் அறிவிப்பு! – வனிதா விஜயகுமார்!

விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனார். சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 4வது முறையாக திருமணம் செய்த இவர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த நிலையில் சமீபத்தில் அவரை விட்டு பிரிய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து வந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து அதற்கு விளக்கம் அளித்துள்ள வனிதா விஜயகுமார் ”பாஜகவில் இணைவது தொடர்பாக தற்போது எதையும் சொல்ல முடியாது. விரைவில் இதுகுறித்த தகவலை நானே தெரிவிப்பேன்” என கூறியுள்ளார்.