தொடர்புடைய செய்திகள்
- மறைந்த இளம் வீரர் - பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி
- தாம்பரம் பைபாஸ் சாலையில் தவிக்கும் பயணிகள்
- ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் சென்னை திரும்பும் பொதுமக்கள்: போக்குவரத்து பாதிப்பு!
- கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத்: போராடி தோல்வி அடைந்த சென்னை!
- "Sing In The Rain": 20 வருடங்களுக்கு பின் பிரபுதேவா-வடிவேலு சந்திப்பு!
இன்று எங்கெங்கு கனமழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டிணம், திருவாரூர், வேதாடண்யம் உள்ளிட்ட பகுதிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
