வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 18 ஏப்ரல் 2022 (11:05 IST)

மறைந்த இளம் வீரர் - பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி

விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி. 
 
தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பிய்ன்ஷிப் போட்டிகள் மேகாலாயாவில் தொடங்கி நடைபெற உள்ளன. இதில் தமிழகம் சார்பாக தீனதயாளன் விஷ்வா உள்ளிட்ட 4 பேர் கலந்து கொள்வதற்காக அசாமில் இருந்து மேகாலயாவுக்கு காரில் சென்றுள்ளனர். 
 
மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் கார் சென்றுக் கொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மோதியதில் கார் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் விஷ்வா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழக இளம் விளையாட்டு வீரர் தீனதயாளன் விஷ்வா விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து  எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். 
 
மேலும்  தமிழகத்தை சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.