1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (10:02 IST)

தாம்பரம் பைபாஸ் சாலையில் தவிக்கும் பயணிகள்

சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல். 
 
தமிழ் புத்தாண்டு புனித வெள்ளி மற்றும் சனி ஞாயிறு ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் வேலை நாள் என்பதால் நேற்று இரவே சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு இலட்சக்கணக்கான மக்கள் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். 
 
சென்னையை நோக்கி வரும் வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் அதனை சரிசெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் தாம்பரம் பைபாஸ் சாலையில் இறக்கிவிடப்படுவதாக புகார் கூறப்படுகிறது. முன்கூட்டியே கூறியிருந்தால் பெருங்களத்தூரில் இறங்கியிருப்போம் எனவும் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.