தொடர்புடைய செய்திகள்
- மூழு ஊரடங்குக்கு மத்தியில் 8 - 12 வரை இயங்கும் ரேஷன் கடைகள்!
- இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தத்துக்கு வெற்றி கோரும் இரு தரப்பு - நிரந்தரமா, தற்காலிகமா?
- மருத்துவ பயன்கள் நிறைந்த முருங்கை !!
- சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட்டு வந்தால் என்ன பயன்கள் உண்டாகும்...?
- மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க சில எளிய வழிமுறைகள்...!!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திற்கு மழை!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
