திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (09:20 IST)

மூழு ஊரடங்குக்கு மத்தியில் 8 - 12 வரை இயங்கும் ரேஷன் கடைகள்!

தமிழகத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக காய்கறி கடைகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்கும் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ரேஷன் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் திணறி வந்தனர். எனவே, இதனை கணக்கில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கடைகளை திறந்து வைக்க உத்தரவிட்டுள்ளது. 
 
அதன்படி, காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இனி, பொதுமக்கள் ரேஷன் பொருட்களை தனிமனித இடைவெளியை கடைபிடித்து வாங்கிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.