1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain today

நேற்று லீவ் எடுத்து இன்று ட்யூட்டியை ஆரம்பித்த மழை!!

tamilnadu rain
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. 
 
நேற்று பெரிதும் மழை இல்லாத நிலையில் இன்று காலை முதலே வெளியில் திறக்காமல் வானம் மூட்டமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் குமரி கடலில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
அபராதம் செலுத்தினாலும் உடனே விடுதலை கிடையாது! – சசிகலா ரிலீஸில் சிக்கல்!