1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain due to depression

அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் மழை: எங்கெங்கு தெரியுமா?

தமிழகம்
தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. தற்போது அந்தமான் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை அடுத்த 3 மணி நேரத்திற்கு பெய்ய வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
காதலுக்காக அரச குடும்பத்தை கைவிட்ட பெண்: தற்போதைய நிலை என்ன தெரியுமா?