ஜெய்பீம் நல்லா இருக்கு.. இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்! – பாஜக அண்ணாமலை கருத்து!
சூர்யாவின் ஜெய்பீம் படம் குறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அதை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியது என்ற அடிப்படையில் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “ஜெய்பீம் நல்ல படம். ஆனால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். எந்தவொரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் ஜெய் பீம் படம் அமைந்திருக்கலாம். ஆனாலும் அது ஒரு பார்க்க வேண்டிய படம்” என்று தெரிவித்துள்ளார்.