புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 நவம்பர் 2021 (11:21 IST)

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள்! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் பள்ளிகள் இனி சனிக்கிழமைகளில் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

சமீப காலமாக மழை, பண்டிகை விடுமுறை என மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகள் கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில் அடுத்து வரும் சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறந்து பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.