1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று மழை!

தமிழகம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என தகவல். 

 
ஆம், தென் கேரளாவிலிருந்து வட உள் கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash