தொடர்புடைய செய்திகள்
- ’முதல்வரை பாக்கணும் விடுங்க’, தடுத்த காவலர்கள்! – பெண்கள் விபரீத முடிவு!
- அரையாண்டு தேர்வு ரத்து! ஆனா எல்லாருக்கும் இல்ல? – அமைச்சர் அறிவிப்பு!
- அட்மிஷன் நடத்த தடை; ஏப்ரலுக்குள் காலி பண்ணனும்! – லதா ரஜினிகாந்துக்கு நெருக்கடி!
- ஆல்பாஸ் செய்யப்பட்ட அரியர் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு: சென்னை பல்கலை அதிரடி!
- பாகிஸ்தானில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்: அவசர சட்டத்துக்கு அதிபர் ஒப்புதல்
எதிர்பார்த்ததை விட குறைவு; விட்டதை பிடிக்க வரும் மழை!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.
வடகிழக்கு பருவமழை தற்போது வரை 4 விழுக்காடு அதிகமாக பெய்தாலும் அது இயல்பான அளவாகதான் எடுத்துக்கொள்ளப்படும். ஏனென்றால் தமிழகத்திற்கு டிசம்பர் வரை 44.7 செ.மீ மழை கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது வரை 43.2 செமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியின் மழை பெய்யும். சென்னையில், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
