வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2024 (12:18 IST)

இதுகூட தெரியவில்லையா? அப்டேட் இல்லாமல் இருக்கிறார் சீமான்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் முதல்வர் பதவி காலியிடங்களாக இருப்பதாக சீமான் குற்றம் சாட்டிய நிலையில், "இது கூட தெரியாமல் சீமான் உள்ளார் என்றும் அப்டேட் இல்லாத அரசியல்வாதியாக அவர் இருப்பதாகவும்," மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கடலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியன், "தமிழகத்தில் உள்ள மருத்துவமனை முதல்வர் பணியிடம் நிரப்ப வில்லை என்ற சீமான் குற்றச்சாட்டு, அவர் அப்டேட் இல்லாமல் இருப்பதை தெளிவாக காட்டுகிறது," என்றார். சமீபத்தில் தான் 20க்கும் மேற்பட்ட மருத்துவமனை முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"அரசியல் கட்சியை நடத்திவரும் சீமான், இது கூட தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அப்டேட் அரசியல்வாதி என்று அவரே நினைத்துக் கொண்டிருக்கிறார்; ஆனால் அவர் காலாவதியான அரசியல்வாதியாக உள்ளார்." என அவர் மேலும் கூறினார்.

"தமிழக அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறை மீது களங்கம் ஏற்படுத்த எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்கிறார்." என்றார். மேலும், காய்ச்சல் போன்ற பாதிப்பு யாருக்கு ஏற்பட்டாலும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும், "தமிழகத்தில் 8,000 க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன." என அவர் கூறினார்.


Edited by Mahendran