1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 ஜனவரி 2025 (17:40 IST)

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அபார்ட்மெண்ட் கட்டிடத்தில் மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தில் இரண்டாவது மாடியில் கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த காரை டிரைவர் தவறுதலாக ரிவர்ஸ் கியரை போட்ட நிலையில் அந்த கார் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள விமன் நகர் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டாவது மாடியில் கார் பார்க்கிங் அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த பார்க்கிங்கில் காரை நிறுத்தி வைத்திருந்த டிரைவர் ஒருவர் காரை முன் பக்கமாக ஓட்டுவதற்கு பதிலாக தெரியாமல் ரிவர்ஸ் போட்டதால், பின்பக்கமாக கார் திடீரென சென்றது.
 
அப்போது அந்த கார் சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த டிரைவருக்கும் கீழே இருந்த யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
மேலும் ஒரு கார் மோதினால் இடியும் அளவுக்கு தரம் குறைந்த சுவர் இருப்பதாக அந்த அப்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் குறை கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஓட்டுனரின் அலட்சியப் போக்கும் இந்த விபத்துக்கு காரணம் என்பதால் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran