வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 4 நவம்பர் 2024 (09:14 IST)

உத்தமர்போல் சாபம் விட வேண்டாம்.. சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி கண்டனம்..!

Vijayalakshmi Seeman
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், "உத்தமர் போல் சாபம் விட வேண்டாம்" என சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை விஜயலட்சுமி ஒரு வீடியோவில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கொள்கைகள் குறித்தும் அவரது கருத்துகள் குறித்தும் சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர், "லாரியில் அடிபட்டு செத்து விடுவாய்" என சாபமிட்டதாக தெரித்தார்.

இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சாபம் விடுகிறார். விஜய்யும் திமுகவும் கொள்கை ரீதியாக தவறு செய்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

அப்படி கொள்கை ரீதியாக தவறு செய்பவர்கள் லாரி விபத்தில் சிக்குவார்கள் என்றால், எங்களை போன்ற அப்பாவி பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்களின் நிலை என்னவாக இருக்கும்? முதலில் உங்கள் கட்சியில் உள்ள ஓட்டைகளை நீங்கள் சரி செய்யுங்கள்," என அவர் குறிப்பிட்டார்.

மேலும், " தாங்கள் செய்ய வேண்டியது குறித்து திமுகவுக்கும், தவெகவுக்கும் நன்றாகவே தெரியும். நீங்கள் தான் ஒழுங்காக வேலை செய்யாமல் விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். உத்தமர் போல் சாபம் விட வேண்டாம்," என்றும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Edited by Siva