ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 22 ஜனவரி 2025 (18:58 IST)

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

Vivek Ramasamy
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்ட சில மணி நேரங்களுக்குள் அவர் உருவாக்கிய DODGE என்ற புதிய துறையின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்ட விவேக் ராமசாமி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
அரசின் செயல் திறனை மேம்படுத்தும் முகமை என்ற இந்த புதிய துறையின் தலைவர்களாக எலான் மாஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், ட்ரம்ப் பதவியேற்ற சில நிமிடங்களில், விவேக் ராமசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
இந்த சூழலில், இந்த துறையின் மற்றொரு தலைவரான எலான் மாஸ்க் தான் விவேக் ராமசாமியை அந்த பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளார் என்று தகவல் பரவி வருகிறது.
 
இது குடியரசு கட்சியின் பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "அமெரிக்காவுக்கு திறமைசாலிகளை வரவேற்க காத்திருக்கிறேன்," என்று ட்ரம்ப் ஒரு புறம் கூறிய நிலையில், இன்னொரு புறம் விவேக் ராமசாமியை பதவி விட்டு அனுப்பியிருப்பது என்பது முரண்பாட்டின் முழு உருவமாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva