வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 2 பிப்ரவரி 2023 (08:08 IST)

தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Train
பயண நேரத்தை குறைக்கும் வகையில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பயண நேரத்தை குறைக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் மத்தியில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வந்தது. 
 
இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு ரயில்வே சென்னை சென்ட்ரல் - கூடூர், சென்னை சென்ட்ரல்  -அத்திப்பட்டு, சென்னை - அரக்கோணம் - ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் சமீபத்தில் வேகத்தை அதிகரிக்கும் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 
 
இந்த நிலையில் சென்னை  கூடூர், சென்னை - ரேணிகுண்டா ஆகிய இரண்டு வழித்தடங்களில் உள்ள ரயில்கள் இனி 130 வேகம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva