மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை: தொல்லியல் துறை அறிவிப்பு
பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பல்லவர்களின் சிற்ப கலையை காண்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்பதும் இதனால் தினந்தோறும் அந்த பகுதி களை கட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சர்வதேச ஜி-20 மாநாடு காரணமாக பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஜி-20 மாநாட்டிற்கு அர்ஜென்டினா ஆஸ்திரேலியா பிரேசில் கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர இருப்பதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்ற முடிவை தொல்லியல் துறை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்து வழக்கம் போல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran