1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tambaram to nellai special train

தாம்பரம் - நெல்லை இடையே கோடைக்கால சிறப்பு ரயில்: தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி..!

Train
கோடை விடுமுறையை கணக்கில் கொண்டு தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
 
ஏப்ரல் 27-ந் தேதி, மே மாதம் 4,11,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தாம்பரம்-நெல்லை இடையே  இரவு 9 மணிக்கு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 
 
அதேபோல் நெல்லை-சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 28-ந்தேதி மே மாதம்5,12,19,26 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு இயக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 இந்தக் கோடைகால சிறப்பு ரயில்களை தென் மாவட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு ரயில்வே துறை அறிவுறுத்துள்ளது. மேலும் இந்த ரயிலின் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மக்கள் தொகை குறைந்தாலும் எங்களிடம் தான் திறமையானவர்கள் அதிகம்: சீனா