1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2023 (07:48 IST)

கவர்னர் மாளிகையில் புதிய சட்டமன்றம் கட்டலாம்.. அமைச்சர் துரைமுருகன்..!

புதிய சட்டமன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நேற்று சட்டமன்றத்தில் எழுந்த நிலையில் அதற்கு அமைச்சர் துரைமுருகன் கவர்னர் மாளிகை நம்முடைய இடம் தான் அங்கு புதிய சட்டமன்றம் கட்டலாம் என கூறியது பரபரப்பு ஏற்படுகிறது. 
 
கடந்த சில நாட்களாகவே தமிழக அரசு கவர்னருக்கும் இடையே பெரும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது என்பதும் குறிப்பாக சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் நேற்று சட்டமன்றத்தில் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் அதற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். கவர்னர் மாளிகை நம்முடைய இடம் தான் அதை எடுத்து புதிய சட்டமன்ற கட்டலாம் அல்லது கிண்டி ரேஸ் கோர்ஸ் நம்முடைய இடம்தான், அதில் 700 ஏக்கர் இடம் உள்ளது, அதிலும் சட்டமன்ற கட்டலாம்
 
நம்முடைய முதலமைச்சர் தன்னுடைய காலத்திற்குள் கண்டிப்பாக புதிய சட்டமன்றத்தை கட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva