திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (15:31 IST)

அரசு விரைவுப் பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது!

bus
அரசு விரைவுப் பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என்று போக்குவரத்துறை இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ் நாடு அரசு விரைவுப் பேருந்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அரரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் கோடை விடுமுறை காலத்தில் லீன் விடுமுறை நீக்கம் செய்யப்படுகிறது. அதேபோல் அரசு விரைவுப் போக்குவரத்து பேருந்துகளில் வார நாட்களில் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையும் நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும், ஜூன் மாதம் 15 ஆம் தேதி வரை கட்டணச் சலுவை கிடையாது என்பதால்,  ஒவ்வொரு டிக்கெட்டும் ரூ.50 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் பயணிகள் செலுத்த நேரிடும் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கோடை விடுமுறையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பததால் போக்குரவத்து கழகம் சலுகைக் கட்டணத்தை நீக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,