1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. More than 100 degree heat in 14 cities

14 நகரங்களில் சதமடித்த வெயில்.. இன்னும் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

வெப்பம்
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் 100 டிகிரிக்கும் அதிகமாக பல இடங்களில் வெப்பம் பதிவாகி வருகிறது 
 
இந்த நிலையில் இன்று காலை முதலே வெயில் அதிகமாக இருந்த நிலையில் 14 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
குறிப்பாக ஈரோடு, கரூர், சேலம், மதுரை, திருச்சி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி, நாமக்கல், மதுரை, சென்னை, தர்மபுரி, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் 100 முதல் 106 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் அதிகபட்சமாக ஈரோடு நகரத்தில் 106 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அது மட்டும் இன்று இன்னும் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் நாட்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஐதராபாத்: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 3 பேர் பலி !