1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (11:30 IST)

ஸ்டாலினை வரவேற்க போட்ட வெடி; தெறித்து ஓடிய மக்கள்! – தாம்பரத்தில் பரபரப்பு!

தாம்பரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு தர வைக்கப்பட்ட பட்டாசால் சிலருக்கு தீ காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொகுதிகளுக்கும் பயணித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தாம்பரத்தில் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த அவரை வரவேற்க திமுகவினர் பட்டாசு வைத்தனர்.

பொதுமக்கள் கூடியிருந்த நிலையில் அதிவேகமாக வெடித்த பட்டாசு நாலா திசைகளிலும் சிதறியதால் பயந்து ஓடிய மக்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் பட்டாசு பட்டத்தில் தீ காயம் அடைந்த ஒரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.