தொடர்புடைய செய்திகள்
- இன்று ஒரே நாளில் ரூ200 அதிகரித்த தங்கம் விலை.. இனி இறங்க வாய்ப்பு இல்லையா?
- பால் தின வாழ்த்து வெளியிடாத ஆவின் நிர்வாகம்: தமிழக பால் முகவர்கள் நலச்சங்கம் கண்டனம்
- உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? அவரே அளித்த பதில்..!
- நோய்களை விரட்டும் பூண்டு கறிவேப்பிலை குழம்பு!
- சீனாவில் வேகமாக பரவும் நிமோனியா.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர கடிதம்..!
பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு: எஸ்.வி.சேகர் மீதான வழக்கு முடித்து வைப்பு..!
பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு வழக்கில் எஸ் வி சேகர் மன்னிப்பு கேட்டதை எடுத்து அந்த வழக்கு முடித்து விடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து நடிகர் எஸ்வி சேகர் தனது சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து தெரிவித்திருந்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதனை அடுத்து எம்பி எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இந்த நிலையில் நடிகர் எஸ்வி சேகர் மன்னிப்பு கோரிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து இந்த மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து எஸ் வி சேகர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Edited by Siva
