திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2023 (08:26 IST)

சீனாவில் வேகமாக பரவும் நிமோனியா.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர கடிதம்..!

fever
சீனாவில் மிக வேகமாக நிமோனியா காய்ச்சல் பரவி வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு இதுகுறித்து அவசர கடிதம் எழுதி உள்ளது. சீனாவில் மிக வேகமாக நிமோனியா வைரஸ் பரவி வருவதன் காரணமாக  இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  சுவாச பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது.

இதை உணர்ந்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக பொது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருந்துகள் ஆக்ஸிஜன் ஆகியவற்றை போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

நிமோனியா காய்ச்சல் கடுமையான சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு தேவையான சிகிச்சைகளை மாவட்டம் மற்றும் மாநில கண்காணிப்பு குழு வைத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் நிமோனியா அச்சுறுத்தல் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து மாநிலங்களும் நிலைமை உணர்ந்து  செயல்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் எழுதிய அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளது

Edited by Siva