1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (11:06 IST)

பால் தின வாழ்த்து வெளியிடாத ஆவின் நிர்வாகம்: தமிழக பால் முகவர்கள் நலச்சங்கம் கண்டனம்

aavin
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி பால் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்றைய பால் தின விழாவில் ஆவின் நிர்வாகம்  எந்தவித வாழ்த்தும் தெரிவிக்காமல் இருந்ததால் பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் வர்கீஸ் குரியன் என்பவரின் பிறந்த நாளான நவம்பர் 26ஆம் தேதி தேசிய பால் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான  ஆவின்   அன்றைய தினத்தில் பால் பாக்கெட்டுகளில் தேசிய பால் தின வாழ்த்து செய்தி வெளியிடுவது வழக்கம்.

ஆனால் முதல் முறையாக  கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பால் பாக்கெட்டுகளில் தேசிய பால் தின வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் இருப்பதால் இதற்கு  தமிழக பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள ஆவின் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசிடம் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Edited by Mahendran